ETV Bharat / state

குமரியில் மாணவர்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி! - Samithope

கன்னியாகுமரி: சாமிதோப்பு அன்பு வனத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச தற்காப்பு கலை பயிற்சி வகுப்பை திண்டிவனம் எம் எல் ஏ சீதாபதி சொக்கலிங்கம் துவக்கி வைத்தார்.

குமரியில் மாணவர்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி!
author img

By

Published : May 7, 2019, 6:37 PM IST

கன்னியாகுமரி சாமி தோப்பு, அன்பு வனத்தில் மாணவர்களுக்கு இலவசமாக தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழாவில் திண்டிவனம் எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம், அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்சியை துவக்கி வைத்து பேசிய திண்டிவனம் எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம், " தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபட்டவர் அய்யா வைகுண்டர். எனவேதான் அவர் வாரிசுகள் தொடர்ந்து தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இங்கு தற்காப்புக்கலை பயிலவிறுக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

குமரியில் மாணவர்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி

இப்பயிற்சி வகுப்புகள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் வரை நடைபெறுகிறது.

Intro:சாமிதோப்பு அன்பு வனத்தில் மாணவர்களுக்கான கோடைகால இலவச தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன இதனை திண்டிவனம் எம் எல் ஏ சீதாபதி சொக்கலிங்கம் துவக்கி வைத்தார்.

Body:சாமிதோப்பு அன்பு வனத்தில் மாணவர்களுக்கான கோடைகால இலவச தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன இதனை திண்டிவனம் எம் எல் ஏ சீதாபதி சொக்கலிங்கம் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிக்கப்பட்டு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் கோடைகாலத்தில் பலவிதமான சின்னச்சின்ன பயிற்சி வகுப்புகளுக்கு செல்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் உள்ள அன்பு வனத்தில் மாணவ மாணவிகளுக்கான தமிழ் கலாச்சாரத்துக்கு உட்பட்ட தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதில் சிலம்பம் ,மல்யுத்தம் வர்மம் ,போன்ற தமிழ் கலாச்சாரத்துக்கு உட்பட்ட தற்காப்பு கலைகள் போன்ற பல்வேறு வகுப்புகள் இன்று துவங்கப்பட்டன .இதனை திண்டிவனம் எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம் துவக்கி வைத்தார் .இந்நிகழ்ச்சிக்கு அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார் .இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டிவனம் எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம் பேசும்போது:- தமிழகத்தில் குறிப்பாக தென்மாநிலங்களில் அய்யாவழியினர் அதிகமாக காணப்படுகின்றனர். வரலாறை படிக்கும் போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபட்டவர் அய்யா வைகுண்டர் .எனவேதான் அவர் வாரிசுகள் தொடர்ந்து தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் .அடிமைப்பட்டு இருந்த சமுதாயங்களின் அடிமைச்சங்கிலியை உடைத்த அய்யா வைகுண்டர் .இங்குதான் மாணவர்கள் தற்காப்புக் கலைகள் படைக்கிறார்கள் அவர்களை வாழ்த்துகிறேன். குறிப்பாக பெண்கள் தற்போது உள்ள சமுதாய சூழ்நிலையில் தற்காப்பு கலைகள் பிடித்து வைப்பது நல்லது. அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார் .இந்த பயிற்சி முகாம் தொடர்ந்து பள்ளிகள் திறக்கும் வரை நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.