கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டசாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் தை, வைகாசி, ஆவணி ஆகிய தமிழ் மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் காலை, மாலையில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதானம், வாகனபவனி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. எட்டாம் நாளான நேற்று மாலை 4 மணிக்கு அய்யா அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் வாகனமானது பதிவலம் வந்து முத்திரிக்கிணற்றின் அருகில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் வாகனத்தை செட்டிவிளை, சாஸ்தான்கோயில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பக்தர்கள் ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். அப்போது ஏராளமான பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர். மேலும் தை 11 ஆம் நாள் அன்னதானம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: