ETV Bharat / state

முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! - Barber shop workers instructions

கன்னியாகுமரி: முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு 22 கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

saloons
saloons
author img

By

Published : May 20, 2020, 1:41 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள முடித்திருத்தும் நிலையங்களை இன்றுமுதல் திறக்கலாம் எனவும், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

  • பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் முடித்திருத்தகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
  • வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு முடித்திருத்த அனுமதி இல்லை. அவ்வாறு அவர்கள் முடித்திருத்த வரும்பட்சத்தில், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
  • முடித்திருத்துபவர்கள் பாதுகாப்புக் கவசம் அணிய வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்கு முகச்சவரம், முடித்திருத்தம் செய்துமுடித்ததும் கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்ய வேண்டும். கண்டிப்பாகக் கையுறை அணிய வேண்டும்.
  • முடித்திருத்த வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதலிய விவரங்களைப் பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும்.
  • ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.
  • முடித்திருத்தும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய், கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • நாற்காலிகள், மேசைகள் கதவின் கைப்பிடி, கண்ணாடிகள், தண்ணீர்க்குழாய்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து முறையாவது சுத்தம்செய்ய வேண்டும்.

இவை உள்பட மொத்தம் 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றி முடித்திருத்தும் நிலையங்கள் செயல்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிகை திருத்துபவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகாமல் அரசு பாதுகாக்க வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.