ETV Bharat / state

தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை - ஒத்திகை

கன்னியாகுமரி: தமிழ்நாடு ,புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் "ஷாஹர் ஹவாச் ஆப்பரேஷன்" என்னும் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஷாஹர் ஹவாச்
author img

By

Published : Jul 19, 2019, 12:30 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 44 மீனவ கிராமங்களில் தொடர்ந்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினருக்கு சொந்தமான ஆறு சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு வாகனங்களை சோதனைக்குட்படுத்திய பின்னரே அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் "ஷாஹர் ஹவாச்" என்ற பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அரசின் கப்பல் படை, சட்டம் ஒழுங்கு காவல் துறை, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறை, மீன்வளத் துறை இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டன.

ஷாஹர் ஹவாச்

இதில் மாவட்ட வாரியாக காவல் துறையினர் பயங்கரவாதிகள் வேடமிட்டு போலி துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் கடல் வழியாக ஊடுருவிச் செல்வர். இவர்களை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர், கப்பல் படையினர் சோதனையிட்டு சட்டம் ஒழுங்கு காவல் துறையினரிடம் ஒப்படைப்பார்கள்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது கன்னியாகுமரி காவல் துறை துணை காண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.

Intro:தமிழ்நாடு ,பாண்டிச்சேரி கடலோர பகுதிகளில் இன்று "ஷாஹர் ஹவாச்" ஆப்ரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார்.

Body:தமிழ்நாடு ,பாண்டிச்சேரி கடலோர பகுதிகளில் இன்று "ஷாஹர் ஹவாச்" ஆப்ரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலமான பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் "ஷாஹர் ஹவாச்" என்ற தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அரசின் கப்பல் படையுடன் இணைந்து சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை உதவியுடன் "ஷாஹர் ஹவாச்"ஆபரேஷன் நடைபெறுகிறது .இதில் மாவட்ட வாரியாக போலீசார் தீவிரவாதிகள் போன்று மாறுவேடத்தில் போலி துப்பாக்கி போல வெடிகுண்டுடன் கடல் வழியாக வருவார்கள். இவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கப்பல் படை சோதனையிட்டு சட்டம் ஒழுங்கு போலீஸாரிடம் ஒப்படைப்பார்கள் .இந்த தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இன்று காலை துவங்கிய "ஷாஹர் ஹவாச்" ஆப்ரேஷன் நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 44 மீனவர் கிராமங்களில் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 6 சோதனைச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் .மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் அந்நியர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார் அப்போது மீனவர் படகு ஒன்றில் பயணம் செய்து நேரடியாக கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிப்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் உட்பட்ட போலீசார் உடனிருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.