கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று (செப்டம்பர் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, "அரசு ரப்பர் கழக தொழிலாளர்களிடமிருந்து நிர்வாகம் ஊதியப் பிடித்தம் செய்த தொகையை திருப்பி தரவேண்டும். மேலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை விற்பனை செய்த இடங்களில் மீண்டும் ரப்பர் மரங்களை மறு நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ரப்பர் கழகத்தின் கீழ் இருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க செயலை நிர்வாகம் கைவிட வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடன்பாடு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2000 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வரும் தற்காலிக ரப்பர் தோட்ட தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என்றனர்.
அரசு ரப்பர் கழகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - ரப்பர் கழக பணியாளர்கள்
கன்னியாகுமரி: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.