குமரி மாவட்டம் நாகர்கோவிலில், குமரி மீண்டெழும் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த இயக்கத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான தேவசகாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ’குமரி மாவட்டத்தில் சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் குளங்களை மண்ணால் நிரப்பி பாசனத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் செய்தியாளர் சந்திப்பு மேலும், ரசாயன உரங்களை ஒழித்து இயற்கை விவசாயத்திற்கு வழி வகுக்க வேண்டும். தமிழகத்தில் ஹெல்மெட் போடவில்லை என்றால் போலீசாரை விட்டு துரத்திப் பிடித்து வழக்குப் பதிவு செய்யும் தமிழக அரசு, விபத்துகளுக்குக் காரணமான சாலைகளை ஏன் பராமரிக்க வில்லை? மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சர்வதேச சுற்றுலாத்தளத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை. இவற்றை எல்லாம் கண்டித்து குமரி மீண்டெழும் இயக்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது’ என்று கூறினார்.இதையும் படிங்க: நீதிமன்ற அலுவலகத்திற்குள் ஊழியர் உயிரிழப்பு!