ரோட்டரி சங்கத்தின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையிலும் தேசிய அளவில் கல்வி வளர்ச்சியை கொண்டுவரவும், பள்ளிக்கு செல்லாமல் இருக்கிற குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் முயற்சியாகவும் கன்னியாகுமரி முதல் கொல்கொத்தாவரையிலான இருச்சக்கர வாகன பேரணி இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.
இந்த பேரணியை ரோட்டரி மத்திய சங்கத்தின் குமரி மாவட்ட ஆளுநர் ஷேக் சலீம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 18 பேர் கலந்துகொள்ளும் இந்த வாகன பேரணி நெல்லை, கரூர், சென்னை, பாண்டிச்சேரி, லக்னோ வழியாக 18 நாள் பயணத்திற்கு பின் வருகின்ற 13ஆம் தேதி கொல்கத்தாவை சென்றடைகிறது.
அங்கு நடைபெறும் ரோட்டரி சங்கத்தின் நூறாவது ஆண்டுவிழாவில் 18 பேர் கௌரவிக்கப்படுவுள்ளனர். வழி நெடுகிலும் இந்த குழுவினர் 'ஆஷா கிரண்' என்ற திட்டத்தோடு தொடர்புடைய தேசிய அளவில் கல்வி வளர்ச்சியை கொண்டு வரவும், பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைக்க நிதி திரட்டும் வகையிலும் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக குமரி மாவட்ட ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் கோரி பேரணி!