கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
இந்நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள வட்டவிளை காமராஜர் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஐயப்பன் என்பவரது வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் அவரது இரண்டு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தைகளை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.