ETV Bharat / state

சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்! போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி! - கன்னியாகுமரி வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி: கனமழையால் நாகர்கோவிலில் இருந்து அருமநல்லூர், தடிக்காரன்கோணம் செல்லும் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

பொதுமக்கள் அவதி!
author img

By

Published : Oct 31, 2019, 2:01 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அம்மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் அணைகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் வெளியேறும் உபரி நீரானது குடியிருப்புப் பகுதிகளிலும் விளைநிலங்களுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. நாகர்கோவிலில் இருந்து அருமநல்லூர், தடிக்காரன்கோணம் பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சந்திப்பான தெரிசனங்கோப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகுதியில் சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள தென்னந்தோப்பு, வாழைத் தோட்டம் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று நாகர்கோவிலுக்குச் செல்லும் முக்கிய சாலையான ஈசாந்திமங்கலம், இறச்சகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குமரி கடல் பகுதிகளில் புயல் உருவாகியுள்ளதால், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க:

இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிகிறது ஜம்மு-காஷ்மீர்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நாகர்கோவிலில் இருந்து அருமநல்லூர் மற்றும் தடிக்காரண்கோணம் செல்லும் சாலையில் தெரிசனம்கோப்பு பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு பொதுமக்கள் அவதி.
Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வலுப்பெற்று கன மழையாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் அணைகளிலிருந்தும் குளங்களில் இருந்தும் வெளியேறும் உபரி நீரானது குடியிருப்பு பகுதிகளிலும் விளைநிலங்களுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் நாகர்கோவிலில் இருந்து அருமநல்லூர் மற்றும் தடிக்காரன்கோணம் பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சந்திப்பான தெரிசனங்கோப்பு பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு சாலை அனைத்தும் நிரம்பி அருமநல்லூர் பகுதிக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்க பட்டுள்ளது.
மேலும் சுற்றியுள்ள விளை நிலங்களான தென்னம்தோப்பு ,வாழை தோப்புகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று நாகர்கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையான ஈசாந்திமங்கலம், இறச்சகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.