கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெப்பக்குளம் சாலை, இந்திரா நகர் சாலை ஆகியவை மிகவும் மோசமான நிலைமையில் பயன்படுத்த இயலாமல் இருந்தது. எனவே இந்தச் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, சாலைகளை சீரமைக்க இரண்டாம் கட்ட 14ஆவது நிதிக்குழு மானியம் மூலம் ரூபாய் 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிகள் இன்று (ஜூலை23) தொடங்கின. இந்நிகழ்வில், அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன் கலந்துகொண்டு சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: சங்கரன்கோவில்: காவல் நிலையம் அருகே பெண் தீக்குளித்த முயற்சி!