கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி அன்றாட உணவிற்குக் கூட அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தச்சூழ்நிலையில், குமரி மாவட்டம் - மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட அமராவதிவிளை பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் இலவச அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி, இன்று அப்பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் வைத்து சுமார் 500 குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: கன்னியாகுமரியில் அதிமுக சார்பில் கரோனா நிவாரண உதவி