கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவல் ஆளுநர்கள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மக்களுக்காக பணி செய்து ஓய்வு பெற்ற காவலர்களின் உடல் பிணியை நீக்கும் வகையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் இதய நோய், சர்க்கரை நோய், முழு உடல் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளுக்கு இலவச மருத்துவம் செய்யப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான ஓய்வு பெற்ற காவல் துறையினர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
மேலும் தேவைப்படும் நபர்களுக்கு மேல் சிகிச்சை, தொடர் சிகிச்சை, மருந்துகளும் இந்த மருத்துவ முகாம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: '96' திரைப்பட பாணியில் நிகழ்ந்த பெண் மருத்துவர்கள் சந்திப்பு!