அரபிக் கடலில் க்யார் புயல் உருவாகியிருப்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிவருகின்றனர். இது தவிர, ஆழ்கடலில் வெவ்வேறு மாநில எல்லைப் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த எட்டாயிரம் மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.
இவற்றில் தேங்காய் பட்டணத்தில் இருந்தும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்தும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 30 விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களை மீட்க கடலோர காவல்படை மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: சுஜித் உள்ள போயி 14 மணி நேரமாச்சே... பொதுமக்கள் புலம்பல்