குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் பூத்துறையைச் சேர்ந்த சிபு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு பழுதடைந்துள்ளது. இதனால் மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் நடுக்கடலிலேயே தத்தளித்து வருகின்றனர். இதையறிந்த சக மீனவர்கள் முட்டம் ஆழ்கடல் பகுதியில் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் தத்தளிக்கும் படகையும், அதிலுள்ள 10 மீனவர்களையும் மீட்க கடற்படைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையில் இந்தப் படகை மீட்பதற்காக தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று காலை விசைப்படகு ஒன்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகா புயல் எதிரொலி: குஜராத்தில் ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் - உதவுமா அரசு?