சென்னை: லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தடுத்த படங்களின் லைன் அப் குறித்து சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்களின் மூலம் எல்சியூ என்ற யுனிவர்ஸை உருவாக்கினார். யுனிவர்ஸ் என்பது ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரம் மற்றொரு படத்தில் அந்த கதையுடன் இணைந்து பயணிக்கும்.
இது போன்று ஹாலிவுட்டில் marvel, DC என்ற இரண்டு யுனிவர்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று விக்ரம் திரைப்படம் மூலம் லோகேஷ் கனகராஜ் எல்சியூ என்ற உலகத்தை உருவாக்கினார். இது மிகவும் பிரபலமடைந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரையும் ஒரே படத்தில் எப்போது இணைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் எல்சியு கதையில் இடம்பெறாமல் தனிக் கதையாக லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் குறித்தும், ரஜினிகாந்துடன் பணிபுரியும் அனுபவம் குறித்தும் தனியார் யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் ஒரு இயக்குநரின் நடிகராக ஏன் உள்ளார் என்பதை சமீபத்திய நாட்களில் தெரிந்து கொண்டேன்.
சஜஷன் ஷாட்களில் கூட கொஞ்சமும் யோசிக்காமல் தானே நிற்பார். ரஜினி சார் மாநகரம் வெளியான போது என்னை அழைத்து வாழ்த்தினார். மாஸ்டர் படப்பிடிப்பு நாட்கள் முதல் ரஜினி சாருடன் படம் இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பின்னர் கூலி திரைப்படம் மூலம் ரஜினி சாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி சார் காலை 9 மணி படப்பிடிப்பிற்கு 7.30 மணிக்கே வந்து விடுவார்" என கூறினார்.
தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசுகையில், “கூலி திரைப்படத்திற்கு பிறகு கைதி 2 படத்தை இயக்கவுள்ளேன். அதனைத்தொடர்ந்து ரோலக்ஸ் கேரக்டருக்காக ஒரு படத்தை இயக்க வேண்டும். அப்படத்தை வைத்து தான் விக்ரம் 2 படத்தில் அனைத்து கேரக்டரையும் வைத்து யுனிவர்ஸை முடிக்க முடியும். இந்த படங்களுக்காக நடிகர்களின் தேதிகள் கிடைக்கவில்லை என்றால் கூலி போன்று தனிக்கதையுடன் படத்தை இயக்கி கொண்டிருப்பேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?
இதனிடையே சமீபத்தில் எல்சியூ யுனிவர்சில் இடம்பெறும் ’பென்ஸ்’ (Benz) படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. லோகேஷ் கதையில், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படமும் எல்சியூவில் இடம்பெறும் என்பக்து குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்