ETV Bharat / state

கேரளாவிற்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேசன் அரிசி பறிமுதல் !

கன்னியாகுமரி: கருங்கல் அருகே டெம்போ வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற மூன்று டன் எடையுள்ள ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புத்துறையினர் கைப்பற்றினர்.

ration rice smuggling to kerala three person were arrested
author img

By

Published : Oct 2, 2019, 12:02 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரயில், பேருந்து, சொகுசு கார்கள், மினி வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு சர்வ சாதாரணமாக தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சில கடத்தல்கள் மட்டுமே தடுக்கப்பட்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தடையின்றி தொடர்ந்து ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்திச் செல்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மூன்று டன் அரிசி

இந்நிலையில் கருங்கல் அருகே மேல குறும்பணையில் இருந்து கேரளாவிற்கு சென்ற டெம்போ வேனை சந்தேகத்தின் அடிப்படையில் உணவு கடத்தல் தடுப்புத்துறை பறக்கும் படை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி வேனில் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து டெம்போ வேன் மற்றும் அதில் இருந்த மூன்று டன் ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த, சௌகத்து(30), அஜ்மல்கான் (40), நிஷாத் (25) ஆகிய மூன்று பேரையும் உணவு கடத்தல் தடுப்புத்துறை அலுவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தும் கடத்தல்காரர்கள்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் கருங்கல் அருகே டெம்போ வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பறிமுதல். இந்த கடத்தலில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரயில், பேருந்து, சொகுசு கார்கள், மினி வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு சர்வசாதாரணமாக தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கடத்தப்படும் அனைத்து ரேஷன் அரிசி மூட்டைகளுமே ரேஷன் கடைகளில் இருந்து தான் கொண்டு செல்லப்படுவதாக குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.
இதில் ஒரு சில கடத்தல்களை மட்டுமே தடுக்கபட்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தடையின்றி தொடர்ந்து ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கருங்கல் அருகே மேல குறும்பனையில் இருந்து கேரளாவிற்கு சென்ற டெம்போ வேனை சந்தேகத்தின் அடிப்படையில் உணவு கடத்தல் தடுப்புத்துறை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வேனை சோதனையிட்டபோது உள்ள சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து டெம்போ வேன் மற்றும் அதில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலத்தை சேர்ந்த, சௌக்த்து 30, அஜ்மல்கான் 40, நிஷாத் 25 ஆகிய மூன்று பேரையும் உணவு கடத்தல் தடுப்புத்துறை போலீசார் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.