ETV Bharat / state

காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட கட்டடத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளி! - gandhi jayanthi

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், ஆண்டுக்கு ஒருமுறைத் தோன்றும் அபூர்வ சூரிய ஒளி விழுந்ததை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

காந்தியின் அஸ்தி கட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை தோன்றும் அபூர்வ சூரிய ஒளி!!

author img

By

Published : Oct 2, 2022, 4:46 PM IST

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவு மண்டபம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்த நாள் அன்று நண்பகல் 12 மணிக்கு காந்தி மண்டபத்தின் மேல் உள்ள துவாரம் வழியாக மண்டபத்தினுள் காந்தி அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் உள்ள அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழுவது வழக்கம்.

காந்தி பிறந்த நாள் அன்று மட்டுமே விழும் இந்த சூரிய ஒளியினைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது உண்டு. அதே போன்று இன்று மகாத்மாவின் பிறந்த நாளினையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் காந்தி அதிகம் தன் வாழ்நாளில் பாடிய 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்னும் பக்திப்பாடலைப் பாடி, அண்ணல் காந்தியடிகளை பலர் நினைவுகூர்ந்தனர்.

நண்பகல் 12 மணிக்கு காந்தி மண்டபத்தின் மேல் பகுதியில் உள்ள துவாரம் வழியாக காந்தி மண்டபத்தின் உள் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் விழுந்த ஆபூர்வ சூரிய ஒளியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு களித்தனர்.

காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட கட்டடத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளி!

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எஸ்.பி. ஹிரி கிரண் பிரசாத் உட்பட அரசு அலுவலர்கள் பலர் காந்தி அஸ்தி கட்டடத்தில் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: சமுத்திரகிரி ரத யாத்திரையை தொடங்கி வைத்த பொன்.ராதகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.