கன்னியாகுமரி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் மூன்றாவது நாளாக இன்று (செப்-9) நாகர்கோவிலில் தொடங்கியது. இந்த பயணத்தின்போது ராகுல் காந்தி வில்லுக்குறி பகுதி சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ராகுலுடன் கலந்துரையாடினார். அவருடன் கரூர் எம்பி ஜோதி மணி உடன் இருந்தார்.
அப்போது பிஆர் பாண்டியன் ராகுல்காந்தியிடம் "கரோனா ஊரடங்குக்கு பின் மிகப்பெரிய உணவு உற்பத்தியை விவசாயிகள் செய்து கொடுத்துவருகின்றனர். இருப்பினும் உள்நாட்டு வணிகம் பெருமளவு அழிந்து வரும் நிலையில் உள்ளது. பெரு நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி வருமான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளையும் உள்நாட்டு பெரும் வணிகர்களையும் ஒன்றிணைத்தால் மட்டுமே அது இரு தரப்புக்கும் பயன் கிடைக்கும்" என்றார்
இதையும் படிங்க:இந்திய ஒற்றுமை, மூன்றாவது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி