ETV Bharat / state

கன்னியாகுமரியில் குற்றங்கள் குறைய வேண்டி காவடி எடுத்த காவல்துறையினர்..! - பொன் ராதாகிருஷ்ணன்

POLICE KAVADAI: கன்னியாகுமரி மாவட்டத்தில், தக்கலை காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக நாடு செழிக்க வேண்டி, வேளிமலை குமாரசாமி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துச் செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

POLICE KAVADAI
கன்னியாகுமரியில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை இணைந்து குமாரசாமி முருகன் கோயிலுக்கு காவடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 5:55 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்று தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசாமி கோயில். முன்னதாக, திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சியின் போது, நாடு செழிப்பாக இருக்கவும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், மக்கள் பஞ்சம், பட்டினி இல்லாமல் வாழவும், இறைவனை வேண்டி பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை சார்பில் வேளிமலை குமாரசாமி முருகன் கோயிலுக்குக் காவடி எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

இதுபோல் பொதுமக்களும் நோய், நொடியின்றி உடல் ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டி கடும் விரதம் இருந்து காவடிகளை எடுத்துச் செல்வது வழக்கம். இறை நம்பிக்கை கொண்ட இந்த பாரம்பரிய நிகழ்ச்சி குமரி மாவட்டம் திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்று வரை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டின் காவடி எடுக்கும் நிகழ்ச்சி தக்கலை காவல் நிலையத்திலிருந்து காவல்துறையினரும், காவல் துறை அதிகாரிகளும், பொதுமக்களும் அதேபோல், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து காவடி எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும், காவடி கட்டும் நிகழ்ச்சியைப் பத்மநாபபுரம் நீதிமன்ற நீதிபதி பிரவீன் ஜீவா, சார் ஆட்சியர் கௌஷிக், துணைக் காவல் கண்காணிப்பாளர் உதய சூரியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து காவலர்கள் மேள தாளங்கள் முழங்க, வேளிமலை குமாரசாமி முருகன் கோயிலுக்குக் காவடி எடுத்துச் சென்றனர்.

இந்த காவடிகள் தக்கலைப் பகுதியில் நகர்வலம் வந்து வெள்ளரி ஏலா, அரண்மனை சாலை, தேசிய நெடுஞ்சாலை வழியாகக் குமாரசாமி முருகன் கோயிலுக்குச் சென்றன. மேலும், பக்தர்கள் சார்பில் பத்மநாபபுரம், முட்டைக்காடு, குமாரபுரம், வெட்டிக்கோணம், புலியூர்க்குறிச்சி, இரணியல்கோணம், தென்கரை, காரவிளை, வழிக்கலாம்பாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேல், புஷ்பம், பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

காவடிகள் வேளிமலை குமாரசாமி முருகன் கோயிலைச் சென்று அடைந்ததும், முதலில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை சார்பில் கொண்டுச் செல்லப்பட்ட பொருட்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், காவடியாகப் பக்தர்கள் கொண்டுச் சென்ற பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட ஏராளமானப் பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் ஏலக்காய் விலை: ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.