ETV Bharat / state

சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்!

கன்னியாகுமரி: நாகர்கோவில் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைக்காமல் சென்ற மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து புத்தேரிப் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

putheri people protest
author img

By

Published : Nov 12, 2019, 8:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் திட்டப்பணிகளுக்காக பொன்மனை முதல் நாகர்கோவில் வரை சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்தது.

ஆனால், குழாய் பதிப்பதற்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் அவசர கதியில் மூடப்பட்டதாலும் சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததாலும் இந்தச் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், சிறிய மழை பெய்தாலும் சாலைகளில் மழை நீரானது தேங்கி, வாகனப்போக்குவரத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் மாநகராட்சி அலுவலர்களைக் கண்டித்து புத்தேரிப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்திற்காக திரண்டனர். இச்சம்பவம் அறிந்து பேச்சுவார்த்தைக்கு வந்த அலுவலர்கள் இந்த மாத இறுதிக்குள் சாலைகளை சீரமைத்து தருகிறோம் என்று தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த மக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: உழைப்புக்கு மரியாதை கொடுத்ததெல்லாம் அண்ணா காலத்திலேயே முடிந்துவிட்டது!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைக்காமல் சென்றதால் பொது மக்கள் அவதி. புத்தேரி பகுதியில் ஊர் மக்கள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு.
Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் திட்ட பணிகளுக்காக பொன்மனை முதல் நாகர்கோவில் வரை சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்தது. பின்னர், குழாய்கள் பதிப்பதற்காக சாலைகளில் தோண்டபட்ட குழிகளை அவசர கோலத்தில் மூடி சென்றனர். இதனை தொடர்ந்து சாலைகளையும் சீரமைக்காததால் இந்த சாலைகள் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கி போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி மாணவ மாணவியர்கள், முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து பொது மக்களும் வாகனங்களில் சாலைகளில் செல்ல மிகவும் சிரமபட்டனர். பல முறை புகார் கொடுத்தும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவில்லை.
இந்நிலையில், அதிகாரிகளை கண்டித்து புத்திரி பகுதியில் இன்று ஊர் மக்கள் சாலை மறியலுக்கு திரண்டனர். சம்பவம் அறிந்து பேச்சுவார்தைக்கு வந்த அதிகாரிகளை ஊர் மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாதத்தில் சாலைகள் சீரமைத்து தருவோம் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தால் போராட்டம் கைவிடப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.