குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து வித பாதுகாப்பு வசதிகளும் கொண்ட, ஆறு தனித்தனி படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது கரோனா வைரஸ் பரிசோதனைக்காக இங்கு இரண்டு பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு உள்ளே நுழைபவர்கள், உள்ளிருந்து வெளியே செல்பவர்கள் கட்டாயம் கைகழுவ வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனை வாசலில் செவிலிய பணியாளர்கள், காவலர்கள் மருத்துவமனைக்குள் நுழைபவர்களையும் கைகளை கட்டாயம் கழுவிய பின்னரே அனுமதிக்கின்றனர்.
இதையும் படிங்க:கரோனா தொற்று : கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் நிர்வாகம்!