கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் இன்று பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈத்தாமொழி அருகே உள்ள அழிகால் கடற்கரை மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் மக்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியேறினர். ஒரு மாதத்திற்கு முன்பு இதுபோல், கடல்நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தூண்டில் வளைவு அமைத்துத் தரவேண்டும் என ஊர் மக்கள் அரசுக்குக் கோரிக்கைவைத்துள்ளனர்.
ஆனால், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில், மீண்டும் ஏற்பட்டிருக்கும் கடல் சீற்றத்தால் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, நாகர்கோவில் - குளச்சல் செல்லும் பிரதான சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.