கன்னியாகுமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், மேல்புறம், தக்கலை, திருவட்டாறு ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 478 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். குமரி மாவட்டத்தில் 149 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால், அந்தந்த மையங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாகப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!