கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்குளம் பகுதியில் அய்யன் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் இயற்கை எழில், சூழ்ந்த மூலிகை காற்று வீசும் மேல் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக தியான மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை, திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் இன்று (ஆக.26) திறந்துவைத்தார்.
இதில் பொன் காமராஜ் சுவாமிகள், சுவாமி சைதன்யாநந்த மகராஜ், அழகப்பபுரம் அருட்தந்தை செல்வராயர், குமரி மாவட்ட அரசு ஹாஜி அபுஸாவிஹ் ஆலிம் ஆகிய மும்மத தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:திருவாரூரில் இரண்டாவது நாளாக தொடரும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் !