கன்னியாகுமரி: பூதபாண்டியில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்த ஜீவானந்தம் இளமையிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கபட்டு தன்னை அந்த இயக்கத்தில் அர்பணித்து பொது வாழ்வில் ஈடுப்பட்டார். 1932 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றார். 40 ஆண்டுகள் பொது வாழ்வில் 10 ஆண்டுகள் சிறை தண்டனைகள் அணிவித்தார்.
நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு தொழிலாளர்கள் ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அவர், சென்னை வண்ணாரபேட்டை தொகுதியில் நின்று போட்டியிட்டு 1952ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யபட்ட பொதுவுடமை சிற்பி என்று அழைக்கபட்ட அவருக்கு இன்று 116ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தேங்காய்பட்டண துறைமுக திட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக பிரச்சினை இருந்துள்ளது. தற்போது அதற்கான தீர்வுக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அற்ப அரசியலுக்காக தேங்காய்பட்டண துறைமுக விவகாரம் தொடர்பாக சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆபத்தான பகுதி என்பதை தெரிந்து அந்த பகுதியை கடக்கும் மீனவர்கள் லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். என்றும் தேங்காப்பட்டணம் துறைமுக விவகாரத்தில் காங்கிரஸ் மீனவ அணி சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருப்பது அரசியல் நாடகம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூட்டணி கட்சி மீது குற்றசாட்டினார்.
இதையும் படிங்க: வரலாற்றில் ஒருமுறை மட்டுமே நிகழ்ந்த அசாதாரண சம்பவம்... தன்னை தானே கைது செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு வரலாற்று நாயகன்...