கன்னியாகுமரி: திற்பரப்பு பேரூராட்சி தலைவர் முதல் அனைத்து கவுன்சிலர்கள் இன்று(அக்.18) நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்றூர் திருவட்டார் குலசேகரம் ஆகிய மூன்று பேரூராட்சிகளில் உள்ள திடக்கழிவுகளை திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொண்டு கொட்டுவதற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளதை கண்டித்து அந்த அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி திற்பரப்பு பேரூராட்சி இவர்கள் மூன்று பேராசிரியர் இடம் நந்தியாற்று கரையாகும் எனவே நந்தியாற்றின் உடைய தண்ணீர் திற்பரப்பு அருவிக்கு செல்கிறது எனவே திற்பரப்பு அருகில் கொட்டுகின்ற தண்ணீரும் கழிவு நீராக மாறுவதற்கு வாய்ப்பு வந்துவிடும்.
இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் பாதிக்கப்படுவார்கள் அது மட்டும் இல்லை கால்நடைகள், பொதுமக்கள் அனைவரும் தொற்று வியாதிகள் ஏற்பட்டு பாதிக்கப்படுவார்கள் என திற்பரப்பு பேரூராட்சியின் தலைவர் பொன் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் - சபாநாயகர் அப்பாவு