ETV Bharat / state

புதிய கட்சி தொடங்கும் கல்யாணசுந்தரம்! - நவம்பர் மாதம் அறிவிப்பு

கன்னியாகுமரி: நாம் தமிழர் கட்சிக்கு இணையாக புதிய கட்சி தொடங்கப்படும் என்று பேராசிரியர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

kalyanasundaram
kalyanasundaram
author img

By

Published : Oct 17, 2020, 4:35 PM IST

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர், கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகியதாக அவரே தெரிவித்தார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை கல்யாணசுந்தரம் தொடக்கி வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வகுக்கப்பட்ட கோட்பாடு, கொள்கைகளை மீறி கட்சித் தலைமை செயல்படுகிறது. நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துக்களை கேட்காமல் கட்சியில் இருந்து ஏராளமானோர் நீக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் எந்தக் கட்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து தமிழ் தேசியவாதிகளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களின் ஆற்றல் வீணடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் கட்சித் தலைமையை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளனர்.

நானும் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மாவட்ட வாரியாக சென்று பொறுப்பாளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் சந்தித்து வருகிறேன். நவம்பர் மாதத்தில் புதிய கட்சி அல்லது புதிய அமைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

புதிய கட்சி தொடங்கும் கல்யாணசுந்தரம்

எந்த கொள்கைக்காக நாம் தமிழர் கட்சி உருவாக்கப்பட்டதோ அதற்கு நேர் எதிராக தற்போது அந்த கட்சி பயணிக்கிற போக்கு என்பது மிகவும் வேதனையாக உள்ளது. நாங்கள் தமிழ்தேசிய கொள்கைக்கு இணையாக பயணிப்போம், எங்களுக்கு பிரச்னையே சீமானின் நிர்வாகம் தான். நாம் தமிழர் கட்சி கொள்கைக்கு எதிராக சீமான் சென்று கொண்டிருக்கிறார். அதனால் சீமானோடு முரண்பட்டுதான் ஆக வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மருத்துவக் குணம் மிகுந்த ஜாதிக்காய் ஊறுகாய்: களைகட்டும் விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.