கன்னியாகுமரி: விவேகானந்தா கேந்திரத்தில் இன்று (நவ.24) முதல் 2 நாட்கள் நடக்கும் ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் முதல் நாள் நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். விழாவிற்கு தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து விழாவில் பங்கேற்றார். மேலும் விழா குழுவினர் ராமானுஜர் உருவம் படித்த சிலையை நினைவு பரிசாக ஆளுநருக்கு வழங்கி சந்தனமாலை அணிவித்தனர். இந்த விழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மீக மடாதிபதி சுவாமிகள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா சார்பாக ராமானுஜர் சாம்ராஜ்ய மகோத்சவம் என்ற நிகழ்ச்சி கேந்திராவில் உள்ள சபா மண்டபத்தில் இன்று (நவ.24) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் நாளை நண்பகல் 12 மணி அளவில் புதிதாக விவேகானந்தா கேந்திராவில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜர் உடைய திருவுருவச் சிலையை காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்து கொண்டிருப்பதால் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:கோவை சடையாண்டியப்பன் கோயில் சிலை மாயம்!