கன்னியாகுமரி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக நேற்று முன் தினம் கேரளா சென்றார். கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் துரோணாச்சாரியா போர்க்கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, கேரளாவில் தங்கியிருந்த திரௌபதி முர்மு, ஒரு நாள் பயணமாக இன்று (மார்ச்.18) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் வந்து இறங்கினார். பின்னர், அவர் அங்கிருந்து கார் மூலம் தமிழ்நாடு அரசின் பூம்புகார் படகு தளத்துக்கு சென்றார். குடியரசு தலைவரின் வருகையொட்டி, கன்னியாகுமரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னர், அங்கிருந்து தனிப்படகு மூலம், நடுக்கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். அங்கு பேட்டரி கார் மூலம் திரௌபதி முர்மு சுற்றி பார்த்தார். இதனைத்தொடர்ந்து கரை திரும்பிய அவர், படகு தளத்தில் இருந்து கார் மூலம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'பாரத மாதா' கோயிலில் சென்று
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதின் கைது? - சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சிறிது நேரம் கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் அவர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்திற்கு மீண்டும் புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்குக் கடந்த மாதம் வருகை தந்தார். மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த அவர் உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். பின் மதுரையில் உள்ள பல இடங்களையும் சென்று பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குச் சென்று மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு தியானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் வருகையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு 5 அடுக்கு தீவிர கண்காணிப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: "தி ஈகிள் இஸ் கம்மிங்" - பேஸ்புக், யூடியூபில் கம்பேக் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!