ETV Bharat / state

குமரி காங். வேட்பாளர் வசந்தகுமார் ஒரு அரசியல் வியாபாரி: பிரேமலதா சாடல்

கன்னியாகுமரி: காங்கிரஸ் வேட்பாளரும் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தகுமார் ஒரு அரசியல் வியாபாரி என குமரியில் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார்.

பிரேமலதா
author img

By

Published : Apr 7, 2019, 8:18 AM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அஞ்சுகிராமத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்த வாகனத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருக்கும்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்தார் எனக்கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும், பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தகுமார் ஒரு அரசியல் வியாபாரி என பிரேமலதா விமர்சித்துப் பேசினார்.

TN_KNK_02_06_PREMALATHA_SPEECH_SCRIPT_TN10005 கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன்னாரை ஆதரித்து அஞ்சுகிராமத்தில் பிரேமலதா விஜயகாந்த் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை அரசியல் வியாபாரி என விமர்சனம் செய்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் கூட்டணி கட்சியினருடன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சுகிராமத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசும் போது பொன்ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருக்கும் போது குமரி மாவட்டத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்தார். அந்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றிட தாமரை சின்னத்தில் வாக்குகளைத்தாருங்கள் என்றும் தற்போது அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாங்குனேரி எம்எல்ஏ வசந்தகுமார் ஒரு அரசியல் வியாபாரி என அவரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் பேசும் போது ஜெயலலிதா பாணியில் தொண்டர்களிடையே செய்வீர்களா செய்வீர்களா என உரையாற்றினார்அப்போது அவரது கட்சியின் தொண்டர்கள் விஜயகாந்த் பாடலுக்கு கைதட்டி நடனமாடினார்கள். விஷுவல் அஞ்சுகிராமத்தில் மக்கள் வெள்ளத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம் செய்த காட்சிகள்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.