கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.3 கோடி ஆளும்கட்சி சார்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், மீதமுள்ள ரூ.5 கோடியை பயனாளிகளுக்கு வழங்காமல் பேரூராட்சி அலுவலர்கள் காலதாமதம் செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கடன் வாங்கி இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட தொடங்கிய பயனாளிகள், இன்னும் நிதி பெறாததால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால், நிதியை விரைந்து புத்தளம் பேரூராட்சி வழங்கவேண்டும் என பயனாளிகளும், திமுகவினரும் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அங்கு ஏராளனமான காவல் துறையினர் குவிக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.