ETV Bharat / state

காந்தியின் 150ஆவது பிறந்தநாள்: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு! - மகாத்மா காந்தி பிறந்த நாள்

கன்னியாகுமரி: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது.

காந்தி அஞ்சல் உரை
author img

By

Published : Jul 30, 2019, 12:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்கம் என்ற தலைப்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அஞ்சல் உறையை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகர் வெளியிட டெல்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய சந்திரசேகர், "மகாத்மா காந்தி 1925, 1927, 1934 ஆகிய ஆண்டுகளில் கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவரது வருகையை நினைவுகூரும் வகையிலும் அவரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டும் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை பல்வேறு புதிய நவீன திட்டங்களை அறிமுகப்படுத்தி-வருகிறது. இதில் இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி (இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க்) முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை கன்னியாகுமரியில் 1,700 பேர் அஞ்சல் வங்கி கணக்கை தொடங்கியுள்ளனர்.

காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அஞ்சல் உறை வெளியீடு!

கடந்த மூன்று ஆண்டுகளில் அஞ்சல் துறை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல் சேவை மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. அஞ்சல் துறை நிதிநிலை சீராக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது இரண்டு தலைமை அஞ்சல் நிலையங்கள், 78 துணை அஞ்சல் நிலையங்கள், 187 கிளை அஞ்சல் நிலையங்கள் உள்ளன.

இவற்றில் 187 கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு நவீன தொழில் நுட்ப வசதிகள் அடங்கிய கையடக்க கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் புகைப்படம், விரல் ரேகை பதிவு, ஸ்கேனர் உள்ளிட்ட நவீன வசதிகள் இருக்கும். குமரியில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 30 ஆயிரம் பேர் கணக்குத் தொடங்கியுள்ளனர்.

தென் மண்டல அளவில் கடந்த ஓராண்டில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செயல்படும் கடவுச்சீட்டு சேவை மூலம் 13 ஆயிரத்து 687 கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்து முதலிடத்தில் உள்ளது" என கூறினார்.

Intro:இந்தியாவின் மகாத்மா அண்ணல் காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் தபால் உரை வெளியீட்டு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது.

Body:இந்தியாவின் மகாத்மா அண்ணல் காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் தபால் உரை வெளியீட்டு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்த 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கன்னியாகுமரியில் சமூக நல்லிணக்கம் என்ற தலைப்பில் சிறப்பு தபால் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது .சிறப்பு தபால் உறையை முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகர் வெளியிட்டார். முதல் தபால் உறையை டெல்லி தேசிய காந்தி அருங்காட்சியகம் இயக்குனர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகர் பத்திரிகைகளை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :-
மகாத்மா காந்தி கடந்த 1925, 1927 ,1934 ஆகிய ஆண்டுகளில் கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார் .அவரது வருகையை நினைவு கூறும் வகையிலும் அவரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தபால் உறையை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை பல்வேறு புதிய நவீன திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் முக்கிய பங்கு வகிக்கிறது .இதுவரை கன்னியாகுமரியில் 1700 பேர் தபால் வங்கி கணக்கை துவங்கி உள்ளனர் .கடந்த மூன்று ஆண்டுகளில் தபால்துறை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல் சேவை மூலம் அதிக வருவாய் ஈட்டி உள்ளது. தபால் துறை நிதி நிலை சீராக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது இரண்டு தலைமை தபால் நிலையங்கள் 78 துணை தபால் நிலையங்கள் மற்றும் 187 கிளை தபால் நிலையங்களும் உள்ளன. இவற்றில் 187 கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு நவீன தொழில் நுட்ப வசதிகள் அடங்கிய கையடக்க கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் புகைப்படம், விரல் ரேகை பதிவு, ஸ்கேனர் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்டிருக்கும். குமரியில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 30,000 பேர் கணக்கு துவங்கி உள்ளனர். தென் மண்டல அளவில் கடந்த ஓராண்டில் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மூலம் 13 ஆயிரத்து 687 பாஸ்போர்ட்டுகள் விநியோகம் செய்து முதலிடத்தில் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.