ETV Bharat / state

கிறிஸ்தவ ஆலயத்தில் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்! - கன்னியாகுமரியில் கிறிஸ்துவ ஆலயத்தில் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் மண்பானைகளில் பொங்கலிட்டு பொங்கல் விழா கொண்டாடியதோடு சிறப்பு திருபலியும் நிறைவேற்றப்பட்டது.

கிறிஸ்துவ ஆலயத்தில் கொண்டாடிய சமத்துவ பொங்கல்
கிறிஸ்துவ ஆலயத்தில் கொண்டாடிய சமத்துவ பொங்கல்
author img

By

Published : Jan 15, 2020, 1:53 PM IST

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. புத்தாடை அணிந்து, மண்பானையில் பொங்கலிட்டு அனைவரும் கோயில்களில் ஒன்றுகூடி தமிழர்களின் பாரம்பரியத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிவருகின்றனர்.

இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புத்தன்துறை மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் கொடியேற்றி ஐந்து நாள்கள் இந்த விழாவினை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில் மாதா தேவாலயத்தில் பொங்கல் கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு மாதா கிறிஸ்தவ ஆலயத்தின் வளாகத்தில் பொங்கல் கொடியேற்றப்பட்டது.

கிறிஸ்தவ ஆலயத்தில் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்

பொங்கல் திருநாளான இன்று கிறிஸ்துவ ஆலயம் முன்பு ஒன்றுகூடிய மக்கள் பானைகளில் பொங்கலிட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளினை வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் நாட்டில் வளம் செழிக்கவும், உழவர்களுக்கு நன்றி கூறும்வகையில் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: காவலர்கள் சேர்ந்து கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழா!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் கொடியேற்றி பொங்கல் பானைகளில் பொங்கலிட்டு பொங்கல் விழா கொண்டாடியதோடு சிறப்பு திருபலியும் நிறைவேற்றப்பட்டது. Body:தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து புது பானையில் பொங்கலிட்டு அனைவரும் கோவில்களில் ஓன்று கூடி தமிழர்களின் பாரம்பரியத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதே போல கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புத்தன்துறை மீனவ கிராமத்தில் வருடம் தோறும் பொங்கல் கொடியேற்றி 5 நாள்கள் இந்த விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் வகையில் மாதா தேவாலயத்தில் பொங்கல் கொடி ஊர்வலமாக கொண்டு வரபட்டு மாதா கிறிஸ்தவ ஆலயத்தில் வளாகத்தில் அதற்கான அமைக்கப்பட்டு இருந்த கொடி மரத்தில் பொங்கல் கொடியேற்றப்பட்டது. பொங்கல் திருநாளான இன்று கிறித்தவ ஆலயம் முன்பு ஓன்று கூடிய மக்கள் பானைகளில் பொங்கலிட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழர் திருநாளன பொங்கல் திருநாளினை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் நாட்டில் வளம் செழிக்கவும், உழவர்களுக்கு நன்றி கூறும் வகையில் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.