ETV Bharat / state

“நிர்மலா சீதாராமனின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது”- பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: ஜிடிபி விகிதம் குறித்து நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 11, 2020, 11:12 PM IST

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இன்று(செப்.11) பாஜகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடையாணி மூட்டில் போலி டாக்டர் சிகிச்சையால் பலியான மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கி சம்மந்தப்பட்ட டாக்டரை கைது செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்கள் பலத்தை காண்பிப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் பாஜகவின் அமைப்புகளை கட்டமைத்து வருகிறோம். அன்றும், இன்றும் மொழிப் பிரச்னையைத் தூண்டிவிட்டு திமுக அரசியல் செய்ய முயல்கிறது. புதிய கல்விக்கொள்கையை பொறுத்தவரையில் இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. அதேநேரத்தில் நம்முடைய பிள்ளைகள் வேறு மொழி கற்பதைத் தடுக்க முடியாது.

டெல்லியில் நடந்த ஆயுஷ் கூட்டத்தில் தமிழ் தெரியாத அலுவலர்கள் வெளியே போங்கள் என்று சொன்ன மத்திய அலுவலரின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் ஜிடிபி சதவீதம் மிகக் கடுமையாகக் குறைந்தது குறித்து கடவுள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்தை பொறுத்த வரையில் டாக்டர்கள் மருத்துவம் வழங்கும்போது நோயாளியிடம் கடவுளிடம் வேண்டுங்கள் என்று கூறுவது போன்றுதான் நாம் அதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஜிடிபி குறைபாடு என்பதை பொறுத்தவரையில் இந்தியாவில் மட்டும் இந்த நிலைமை ஏற்படவில்லை, அனைத்து நாடுகளிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. அவற்றிலிருந்து எப்படி நாம் மீள வேண்டும் என சிந்திக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.