கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகள் நாகர்கோவிலில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது. இங்கு வாக்குகள் 28 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இந்த மையத்தில் 600 பணியாளர்கள் வாக்குகள் எண்ணும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிகளில் ஆயிரம் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், குமரி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ண ஆரம்பித்ததும் முதற்கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து, தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
அப்போது கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்கு இயந்திரங்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை திறக்க முடியவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காலதாமதம் ஆனதால் அந்த இரண்டு பெட்டிகளும் ஒதுக்கி வைக்கப்பட்டு மற்ற பெட்டிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண ஆரம்பித்துள்ளனர். அதே நேரத்தில் பழுதான பெட்டியை திறக்க முயற்சி நடைபெற்றுவருகிறது.