பிரதமர் நரேந்திர மோடியின் 69ஆவது பிறந்த நாள் விழாவை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு ரத்த தான முகாமில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அதனைத் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் நபர்களை அரவணைக்கத் தயாராக இல்லாத, தமிழ் மொழியைப் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளைத்தான் நன்றி கெட்ட தமிழர்கள் என்று கூறினேன், ஆகையால் இந்த கருத்திற்கும் எட்டு கோடி தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'நன்றி மறந்தவன் தமிழன்...!' - பொன். ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு