கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையில் சுற்றித் திரியும் வாகன ஓட்டிகளை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், அவர்களிடம் அபதாரம் விதித்ததோடு, வாகனங்களையும் திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும், தடையை மீறி சாலையில் வந்த வாகன ஓட்டிகளிடம் ‘தடையை மீறி இனிமேல் சாலையில் வரமாட்டோம்’ எனக் கூறச்சொல்லி நூதன முறையில் தண்டனை வழங்கினர்.
குமரியில், 24 மணி நேரமும் பொதுமக்கள், பேருந்துகள் நிறைந்து காணப்படும் வடசேரி பேருந்து நிலையமும், அண்ணா பேருந்து நிலையமும் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்!