ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு: கைதாகிய இருவரிடம் தீவிர விசாரணை - si willson murderer

கன்னியாகுமரி: சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரை தனிப்படை காவல் துறையினர் திருச்சூர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வில்சன் கொலை வழக்கு  காவல் ஆய்வாளர் வில்சன் கொலையாளிகள்  si wilson murder case  si willson murderer  police officers plan to increse the wilson murderer police custody
வில்சன் கொலையாளிகள்
author img

By

Published : Jan 31, 2020, 8:01 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் ஜனவரி எட்டாம் தேதி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரும் கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வேராவல் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தப்பிச்செல்ல முயன்றபோது உடுப்பியில் வைத்து அவர்களை அம்மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் தமிழ்நாடு காவல் துறையினர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் கடந்த 20ஆம் தேதி ஆஜர்படுத்தி பத்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பத்து நாள்கள் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், நேற்று முன்தினம் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

வில்சன் கொலையாளிகள்

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், வில்சனைக் கொலைசெய்துவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை திருவனந்தபுரத்திலும் துப்பாக்கியை எர்ணாகுளத்திலும் தூக்கியெறிந்தனர் என்றும், மேலும் அவர்கள் இருவரின் உடைகளும் திருச்சூரில் இருப்பதும் தெரியவந்தது. தற்போது இருவரையும் திருச்சூர் அழைத்துச் சென்று தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் உதவியவர்கள் யார்?, எதற்காக இவர்கள் இருவரும் திருச்சூர் சென்றனர்? என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். மேலும், இவர்களுக்கு மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால் அந்தப் பகுதிகளுக்கு அழைத்துச்சென்றும் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், இவ்விருவரின் காவல் விசாரணை நாளை நீட்டிக்கக்கோரி தனிப்படை காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருப்பதாக காவல் துறை வட்டாரத்திலிருந்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ், சமஸ்கிருதம் என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் - அமைச்சர் பாண்டியராஜன்

Intro:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் SSI வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அப்துல் ஷமீம், தவுபிக் ஆகிய இரண்டு பேரையும் நாளை நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதால் நேற்று இரவு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை - கொலை செய்து விட்டு தலை மொட்டை அடிக்க திருச்சூர் சென்றதாக விசாரணையில் கூறியதை தொடர்ந்து கூடுதல் விசாரணைக்காக இன்று கேரளா மாநிலம் திரிசூருக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.Body:tn_knk_04_vilsan_murder_accused_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் SSI வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அப்துல் ஷமீம், தவுபிக் ஆகிய இரண்டு பேரையும் நாளை நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதால் நேற்று இரவு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை - கொலை செய்து விட்டு தலை மொட்டை அடிக்க திருச்சூர் சென்றதாக விசாரணையில் கூறியதை தொடர்ந்து கூடுதல் விசாரணைக்காக இன்று கேரளா மாநிலம் திரிசூருக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8 ம் தேதி சோதனைச்சாவடியில் காவலில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கேரளாவிலிருந்து கர்நாடகா வழியாகச் செல்லும் வேராவல் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தப்பிச் செல்ல முயன்ற அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அம் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை குமரி மாவட்ட போலீசார் நாகர்கோவில் நீதி மன்றத்தில் கடந்த 20 ஆம் தேதி ஆஜர் செய்யபட்டு பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்து நாட்கள் முடிவடையும் நிலையில் நாளை நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். இதனால் நேற்று இரவு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டுபேர்களுக்கும் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 8 ஆம் தேதி கொலையை செய்துவிட்டு கத்தியை திருவனந்தபுரத்திலும் , துப்பாக்கியை எர்ணாகுளத்திலும் போட்டுவிட்டு பின்னர் அங்கிருந்து திரிசூர் சென்று மொட்டை அடித்து தங்கள் அடையாளங்களை மாற்றியுள்ளனர். அங்கு இவர்களின் துணிகளும் இருப்பதாக கூறி உள்ளனர். மேலும் அவர்களது கூட்டாளிகள் யார் இதற்கு உதவிய நபர்கள் யார் எதற்காக திரிசூர் சென்றார்கள் என்ற கோணத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்ப்பு இருப்பதால் அந்த பகுதிகளில் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதால் இருவரின் போலீஸ் காவல் நாளை ஜனவரி 31 உடன் 10 நாள் முடிவடையும் நிலையில் விசாரணைக்காக மேலும் கூடுதல் நாள் போலீஸ் கஸ்டடியில் கேட்டு தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக காவல்துறை வட்டார தகவல்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.