மும்பையில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பின்னர், கடல்வழி பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்திவருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன ரோந்துப் படகுகள், துப்பாக்கி, பைனாகுலர் போன்ற கருவிகள் மூலம் கடல்வழி ரோந்துப் பணியை, குமரி கடலோரப் பாதுகாப்பு குழுமம் தீவிரப்படுத்திவருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடலில் தவறி விழுந்து தத்தளிக்கும் நபர்களை அதிவேகமாகச் சென்று மீட்கும் வகையில் புதிதாக நவீன படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கடலோர பாதுகாப்புக் குழும அலுவலர்கள், "தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த நவீன வாகனம் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வாகனத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். கடல் சீற்றத்திலும், இந்த வாகனத்தை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர் இயக்க தேவையான பயிற்சியை விரைவில் அளிக்க, அத்துறை நிபுணர்கள் வரவுள்ளனர். இதேபோன்று கடல்வழி ரோந்துக்கென நவீன படகும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆற்றில் பாய்ந்த பைக் - கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத் துறையினர்!
.