ETV Bharat / state

குமரி மருத்துவர் கொலை வழக்கு: லீக்கான ஆடியோ! - கொலை வழக்கு

கன்னியாகுமரி: மருத்துவர் ஒருவரின் தற்கொலை வழக்கில் மேலும் ஒரு பரபரப்பு ஆடியோ வெளியாகியதையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

குமரி மருத்துவர் கொலை வழக்கு: லீக்கான ஆடியோ!
கொலை வழக்கு
author img

By

Published : Oct 31, 2020, 10:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கை இலந்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் சிவராம பெருமாள் (42) அப்பகுதியில் மருத்துவமனை நடத்திவந்தார். இவர், குமரி கிழக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி மாவட்ட இணை அமைப்பாளராகவும் இருந்தார்.

இவரது மனைவி மருத்துவர் சீதா அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த அக். 26 ஆம் தேதி மருத்துவர் சிவராம பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரின், தற்கொலைக்கான காரணம் குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதம் மற்றும் நண்பர்களிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதிய கடிதத்தில் கன்னியாகுமரி பாஸ்கரன், இலந்தைவிளையைச் சேர்ந்த விஜய ஆனந்த் ஆகியோர் தான் தனது மரணத்திற்கு காரணம் என்று கூறியிருந்தார்.

குமரி டிஎஸ்பி பாஸ்கரன் சிவராம பெருமாளை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அவதூறாகப் பேசியதாக அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சிவராம பெருமாள் தற்கொலை செய்துகொண்டார். இதுவே அவர் தற்கொலை செய்ய காரணம் என உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், டிஎஸ்பி தரப்பில் சிவராம பெருமாள் யார் என்றே தெரியாது எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கண்ணன் என்பவரிடம் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வரைபடம் தயாரித்து சாட்சியாக கையெழுத்து பெற்ற காவல் துறையினர், அவரிடம் மேலும் ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும் என செல்ஃபோனில் கேட்டுள்ளனர்.

ஏற்கனவே போட்ட கையெழுத்தை பரிசோதிக்க போவதாக காவல் துறையினர் அப்போது கூறியுள்ளனர். வழக்கில் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்த வெள்ளை பேப்பரில் கையெழுத்து பெற முயற்சி நடைபெறுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக காவல் அலுவலர் ஒருவருடன் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சுசீந்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஏடிஎஸ்பி மணிமாறன், ஏஎஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி ஆகியோர் வழக்கு விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் விசாரணை நடத்திவந்தபோது வழக்கு விசாரணை மாவட்ட குற்றபிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் மூன்றாவது விசாரணை அமைப்பு இந்த வழக்கை தற்போது விசாரணை செய்கிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித முடிவும் காவல் துறையால் எட்டப்படவில்லை.

காவல் துறையினர், ஏற்கனவே மருத்துவரின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு விட்ட நிலையில் அடுத்த டிஎஸ்பி பாஸ்கரன், விஜய ஆனந்த் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.