ETV Bharat / state

வெளியே சென்றதால் தேர்வு எழுதிய பொதுமக்கள் - காவல் துறையின் நூதன தண்டனை - காவல்துறை அதிரடி

கன்னியாகுமரி: ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிவோருக்கு மாவட்ட காவல் துறையினர் கரோனா வைரஸ் விழிப்புணர்வு தேர்வு நடத்தி தவறான பதில் எழுதுவோரை ஒரு தவறுக்கு பத்து தோப்புக்கரணம் இடுவதோடு கரோனா உறுதிமொழி எடுக்கும் நூதன தண்டனை வழங்கிவருகின்றனர்.

வெளியே சென்றதால் தேர்வு எழுதிய பொதுமக்கள்

author img

By

Published : Mar 28, 2020, 7:24 AM IST

கரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதை மீறியும் பல இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதனைத் தடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக தக்கலை சரக டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் சாலையில் தேவையின்றி சுற்றி திரியும் இளைஞர்கள், பொதுமக்களை தடுத்து நிறுத்தி கரோனா வைரஸ் விழிப்புணர்வு தேர்வு நடத்தி வருகின்றனர்.

வெளியே சென்றதால் தேர்வு எழுதிய பொதுமக்கள்

அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள்,

கரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது?

கரோனா வைரஸின் காதலி பெயர் என்ன?

கரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்படும் உடல் அமைப்பு பாகம் என்ன?

கரோனா வைரஸ் ஊரடங்கை அலட்சியபடுத்தியதால் அதிகம் உயிர் இழந்த நாடு எது?

கரோனா வைரஸை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்ற பத்து கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை கொடுத்து அதற்கு அதிலேயே பதில் எழுத வைக்கின்றனர். தவறான பதில் எழுதிய ஒவ்வொரு கேள்விக்கும் பத்து தோப்புக்கரணம் போடுவதோடு கரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்க வைத்துவிட்டு பத்து கேள்விகளுக்கான பதில்களை சொல்லி கொடுத்து 144 உத்தரவை மீறுவதால் விதிக்கப்படும் சட்டங்களையும் விளக்கிச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஒற்றை இருமலால் காலியான சூப்பர் மார்கெட் - கரோனா பிராங்கால் ஏற்பட்ட விபரிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.