தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கும், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கும் குட்கா, கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன்பிரசாத் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்ட எஸ்.பி ஷில்பா தியாவையா ஆகியோர் தலைமையில் இரு மாநில காவல்துறையினர் களியக்காவிளை பகுதியில் உள்ள கூரியர் கடைகள் மற்றும் மருந்து கடைகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எல்லைப்பகுதி ஆட்டோ , கார் உட்பட வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு கேரள காவல்துறையினர் 9995966666 என்ற எண்ணையும் தமிழ்நாடு காவல்துறையினர் 7010363173 என்ற எண்ணையும் வெளியிட்டு போதைப் பொருட்கள் குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கக் கேட்டு கொண்டனர்.
இரு மாநில எஸ்பிக்கள் தலைமையில் சோதனை கஞ்சா, குட்கா உட்பட கடத்தலை தடுக்க இரு மாநில காவல்துறையினர் கூட்டு நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.
இதையும் படிங்க: பணியின்போது மது அருந்தினால் கடும் நடவடிக்கை - போக்குவரத்து துறை எச்சரிக்கை