கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த மயிலாடியைச் சேர்ந்தவர் குருசாமி (58). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக (டிக்கெட் பரிசோதகராக) பணியாற்றிவருகிறார். இதனிடையே இவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு வயது பள்ளி மாணவியை தனியாக அழைத்துச்சென்று அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
விவரம் அறியாத அந்த மாணவி இதுகுறித்து வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். பின்னர் இந்த விஷயம் குறித்து மாணவியின் தாய்க்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர் இதுகுறித்த தனது மகளிடம் கேட்டபோது அச்சிறுமி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குருசாமி மீது புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் குருசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.