ETV Bharat / state

+2 மாணவியை சீரழித்த இரு இளைஞர்கள் கைது! - POKSOACT

கன்னியாகுமரி: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

+2 மாணவி கற்பழிப்பு
author img

By

Published : Jul 5, 2019, 1:26 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பேப்பர், பேனா வாங்குவதாக தாயிடம் கூறிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

செல்லும் வழியில் தன் காதலனை சந்தித்துள்ளார். இருவரும் தனியாக பேச வேண்டுமென ஆள்நடமாட்டம் இல்லாத சற்று இருட்டான பகுதிக்கு சென்றுள்ளனர். அதைக் கவனித்த ஆண்டிவிளையைச் சேர்ந்த அபிஷேக்(21) அவரது நண்பர் சகாய ஜீனு(22) ஆகிய இருவரும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அப்பெண்ணை தென்னந்தோப்புக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தடுக்க முயன்ற அவரின் காதலனையும் தாக்கி அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

பின்பு அந்த மாணவி அங்கிருந்து வீட்டிற்கு சென்று இச்சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் அவரின் தாயாரோ, இச்சம்பவம் ஊருக்குத் தெரிந்தால் கெட்ட பெயர் ஆகிவிடும் எனக்கூறி சமாதானம் செய்துள்ளார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அம்மாணவி தனக்கு நேர்ந்ததுபோல் வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக, கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அபிஷேக், சகாய ஜீனு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

+2 மாணவியை சீரழித்த இரு இளைஞர்கள் கைது!

Intro:கன்னியாகுமரி அருகே + 2 மாணவியை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது.

Body:கன்னியாகுமரி அருகே + 2 மாணவியை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு அடுத்த நாள் காலையில் பள்ளிக்குச் செல்ல தேவையான பேப்பர், பென் போன்ற உபகரணங்கள் வாங்க தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயம் மாணவியின் காதலனான விஜய் ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதிக்குள் செல்ல அந்த மாணவியிடம் சொல்லியுள்ளார் .இதைக் கேட்டு அந்த இருட்டு பகுதிக்குள் சென்ற மாணவியை பின்தொடர்ந்து சென்ற தென்தாமரைகுளம் அருகே ஆண்டிவிளை ஊரைச் சேர்ந்த அபிஷேக் வயது 21 அவரது நண்பர் சகாய ஜீனு ஆகிய இருவரும் பின்தொடர்ந்து சென்று மாணவியை வழிமறித்து தென்னந்தோப்பில் கொண்டு சென்று கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தடுக்க சென்ற காதலன் விஜய் தாக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். இரவு மாணவி தாயாரிடம் சொல்லி அழுதுள்ளார் .பெண் என்பதால் வெளியில் தெரிந்தால் கெட்ட பெயர் ஏற்படும் என மூடி மறைத்து உள்ளார்கள். இந்நிலையில் மனக்குமுறலுடன் இருந்த மாணவி தனக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனை எந்த மாணவிகளுக்கும் ஏற்படாமலிருக்க கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாந்தி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளான அபிஷேக் மற்றும் சகாய ஜீனு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.