கன்னியாகுமரி கடுக்கரை ஊரட்சிக்கு உட்பட்ட ஆலடி பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்களின் தேவைக்காக அப்பகுதியில் ஊராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் பொதுமக்கள் குடிநீருக்காக இந்த தொட்டியை பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில், சமூக விரோதிகள் யாரோ சிலர் இந்த குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்தை கலந்துள்ளனர்.
இதனையறியாத அப்பகுதி மக்கள் தண்ணீரை பிடித்துள்ளனர். ஆனால், தண்ணீரில் பூச்சி மருந்து வாடை வருவதை உணர்ந்த அவர்கள், இது குறித்து பூதப்பாண்டி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தொட்டியிலிருந்த தண்ணீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும், சம்பவ இடத்தை தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கஸ்டல், கடுக்கரை ஊராட்சி தலைவர் கமலா உள்ளிட்ட தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் இரண்டு பிரிவினருக்கு இடையே மோதல் இருந்துவந்துள்ளது.
இதனால், பழிவாங்குவதற்காக ஒரு பிரிவினர் குடிநீர் தொட்டியில் மருந்து கலந்திருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் இருபிரிவினரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மீன்களுக்கு வைக்கப்பட்ட விஷம் - குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!