கன்னியாகுமரி மாவட்ட சிமெண்ட் அரவை கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று (ஜூன்.28) இரவு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் " கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஆற்றுமணல் மற்றும் சல்லி, பாறை பொடி வழங்குவது தடை செய்யப்பட்டு உள்ளது.
![அதிகாரிகள் ஆதரவுடன் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல் - தடுக்க கலெக்டரிடம் மனு...](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15685162_p.jpg)
ஆனால், சில கல் குவாரிகளில் இருந்து அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கனிம வளங்கள் கேரளாவிற்கு அதிகாரிகள் ஆதரவுடன் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூரில் கட்டிடத் தொழில் அடியோடு நசிந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதோடு கட்டுமான தொழில்களுக்குரிய மூலப் பொருள்கள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொழிலாளிகளின் வாழ்வு மேம்படும்" என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கனிம வளத்தை சுரண்ட அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்