ETV Bharat / state

மாற்றுத்திறனாளியின் சொத்து அபகரிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு! - மாற்றுத்திறனாளியின் சொத்து அபகரிப்பு

கன்னியாகுமரி: மாற்றுத்திறனாளியின் சொத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

misappropriated the property of the physically challenged person
ஆட்சியரிடம் மனு
author img

By

Published : Sep 8, 2020, 8:56 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 90 விழுக்காடு பாதிப்படைந்த நிலையிலுள்ள மாற்றுத்திறனாளி. இவருக்குச் சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 1ஆம் தேதி ஒரு கும்பலுடன் விஜயனின் நிலத்திற்குள் புகுந்து அங்கிருந்த விஜயனின் மூதாதையரின் கல்லறைகளை இடித்து அகற்றியுள்ளார். இச்சம்பவம் குறித்து விஜயன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் இரு முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கும் புகார் அளித்துள்ளார். மேலும் கடந்த மாதம் 18ஆம் தேதி மார்த்தாண்டத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். எனினும் இதுவரை இப்பிரச்னை தொடர்பாக அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 7) மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அச்சங்கத்தின் நிர்வாகிகளிடம் பேசி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.