ETV Bharat / state

குமரியில் பெண் காவலர்களுக்கு எதிராக எஸ்.பி.யிடம் மனு! - Fake Case

கன்னியாகுமரி: பெண் காவலர்கள் இருவர் ஒன்றுசேர்ந்து கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Petition to SP against female Police in Kumari

author img

By

Published : Sep 24, 2020, 6:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நுள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மேரி (61). இவரும் நுள்ளிவிளை ஊர் பொதுமக்கள் சிலரும் இன்று மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், "நான் நுள்ளிவிளை காரங்காடு பகுதியில் வசித்துவருகிறேன். எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு ததேயு என்ற மகன் உள்ளார்.

எனது மகன் ததேயுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மேரி சுஜிக்கும் 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்குப் பின்னர் எனது மகன் ததேயு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். மாதம் ஒருமுறை வீட்டிற்கு வந்து எனது மருமகளையும், பேரக் குழந்தையையும் பார்த்துவிட்டு மீண்டும் பணிக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், மேரி சுஜி எங்களிடம் தகராறு செய்துவிட்டு அவரது சகோதரி மேரி சுபா வீட்டிற்குச் சென்றுவிட்டார். இது குறித்து தகவலறிந்த எனது மகன் ஊருக்கு வந்து மேரி சுஜியை சந்தித்து சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

ஆனால், அதற்கு மேரி சுஜி உடன்படவில்லை. மாறாக மேல் சுஜியும், மேரி சுபாவும் சேர்ந்து எனது மகனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து அனுப்பிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து எனது மகன் ததேயு எங்கள் ஆலய பங்குத்தந்தையிடம் கூறி இருவரையும் சேர்த்துவைக்குமாறு முறையிட்டார்.

பின்னர் பங்குத்தந்தை மேரிசுஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், எந்தப் பலனும் இல்லை. இதைத் தொடர்ந்து, எனது மகன் தக்கலை கூடுதல் மாவட்ட உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அப்போது, மேரி சுஜி என்னையும் எனது மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். நானும் என் சகோதரியும் காவலர்களாகப் பணிபுரிகிறோம். உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் நினைத்தால் எங்களை மானபங்கம் செய்ய முயற்சி செய்தீர்கள் எனக் குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்துவிடுவோம் என்று மிரட்டினார்.

இது குறித்து காவல் துறை உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்தோம்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் எனது மகன் ததேயு புதிதாக தொழில் தொடங்க இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகப் பொய் புகார் தெரிவித்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேரி சுஜி, மேரி சுபா ஆகிய இருவராலும் எங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இவர்கள் இருவரையும் வேறு மாவட்டத்திற்கு மாற்றி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மேரி சுஜியை எனது மகனுடன் சேர்த்துவைக்க காவல் துறை உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.