இது தொடர்பாக மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், "குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள முருகப் பெருமான் சூரசம்ஹாரம் நடைபெறும். இவை முடிந்து நான்காவது நாள் மாலையில் மயிலாடியில் அமைந்துள்ள தீர்த்தவாரி மடத்தில் எழுந்தருள்வார்.
பின்னர் அவருக்கு நாஞ்சில்நாட்டு புத்தனார் கால்வாயில் ஆராட்டு வைபவம் நடைபெறும். இதையடுத்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள் பாலித்து பின்னர் மீண்டும் மருங்கூர் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு ஆராட்டு வைபவம் வரும் 24ஆம் தேதி செவ்வாய் கிழமை வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போன்று இந்த ஆண்டும் மயிலாடி ஆராட்டு விழா நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயில் யானை அபயாம்பிகை மழையில் நனைந்து குதூகலம்!