கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவளையில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் சிவசுப்பிரமணியம் (55). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் திட்டுவளையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
திட்டுவளையில் ஜமால் மைதீன் (72) என்ற டீக்கடை நடத்தி வருபவரிடம் சிவசுப்பிரமணியம் கடன் பெற்றிருந்தார். உரிய நேரத்தில் கடனை அடைகாததால் ஜமால் மைதீன் பணத்தினை கேட்டுள்ளார்.
அதற்கு ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியம் முக்கிய சாலையில் நெருக்கடி மிகுந்த நேரத்தில் அரிவாளுடன் வந்து தகாத வார்த்தைகளை பேசி அட்டகாசம் செய்தார்.
இதனால் சாலையில் நடந்து சென்ற பெண்கள், மாணவியர்கள் அலறி அடித்து ஓடினார்கள். சிவசுப்பிரமணியம் நீண்ட நேரம் அரிவாளுடன் சாலையில் அட்டகாசம் செய்தார். இதனை போலீசார் கண்டு கொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. அண்மை காலமாக கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்தில் சீல் அகற்றம்